தமிழக செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினரானார் நிதின் நபின்: எல்.முருகன் வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபினுக்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிகாரில் 5 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு நேற்று தோ்தல் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மத்திய இணை மந்திரி எல்.முருகனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”மாநிலங்களவைத் தேர்தலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் புதிய பொறுப்பில் அவர் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன். பாங்கிபூர் சட்டமன்ற உறுப்பினராக நபின் பெற்ற அனுபவமும், அவரது தலைமைத்துவமும் மாநிலங்களவையின் செயல்பாடுகளுக்குத் தீர்க்கமான பங்களிப்பை வழங்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT