சென்னை,
தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கு 5 மாதங்கள் கடந்த பிறகும் மதிப்பூதியம் கிடைக்காததால் அரசு ஊழியர்கள் விரக்தியில் உள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபையின் 234 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக சட்டசபை தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை கடந்த மே மாதம் 4-ந் தேதி நடந்தது. தேர்தல் காலத்தின்போது அதிகாரம் முழுவதும் தேர்தல் ஆணையத்திற்கு சென்றது.
அரசு அலுவலர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட் டுப்பாட்டிற்குள் சென்றனர். ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட் டார வளர்ச்சி அலுவலர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், வேளாண்மைத் துறையினர், தோட்டக்கலைத் துறையினர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி செயலாளர்கள் என உள்ளாட்சி துறை அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் கணக்குகளை சரிபார்க்க கருவூலம் மற்றும் கணக்குத்துறை அதிகாரிகள் பல்வேறு அரசுத் துறைகளின் பணியாளர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர தமிழ்நாடு போலீஸ்துறை, சிறப்பு போலீஸ் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை, சிறைத்துறை, வனத்துறை, மத்திய அரசின் ஆயுதப்படைகள், மத்திய ரிசர்வ் படைகள் உள்பட போலீஸ் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். மேலும் வாக்குப்பெட்டிகளை எடுத்துச்சென்று ஒப்படைக்கும் பணியில் மண்டல அலுவலர்கள், துணை அலுவலர்கள் என அரசு இயந்திரம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இவ்வாறாக அனைத்து நிலையிலான ஊழியர்கள், அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணியில் ஈடுபட்ட னர். பொதுவாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 2 மாதங்களுக்குள் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தேர்தல் பணியாற்றியதற்கான மதிப்பூதியம் வழங்கப்பட்டு விடும். இதை தலைமை தேர்தல் அலுவலரின் ஆணைக்கு இணைங்க நிதித்துறை விடுவிக்கும்.
ஆனால் தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4-ந் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் என 5 மாதங்கள் கடந்து 6-வது மாதம் பிறந்து விட்டது. எனினும் தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் யாருக்கும் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. இந்த மதிப்பூதியம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பணியாளர்கள் எண்ணிக்கையை பொறுத்து ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் ரூ.300 கோடி முதல் ரூ.500 கோடி வரை இந்த மதிப்பூதியம் வரும் எனவும் கூறப்படுகிறது. எனினும் தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கான மதிப்பூதியம் இதுவரை நிதித்துறையில் இருந்து விடுவிக்கப்பட வில்லை. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள்
தலைமை தேர்தல் அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்றபோதிலும், நிதித் துறையில் இதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் முடிந்து அடுத்த கட்டமாக உள்ளாட்சி தேர்தலை எதிர்நோக்க உள்ள நிலையில் பொதுத் தேர்தலில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படாதது ஊழியர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அரசு ஊழியர்கள் தரப்பில் கூறும்போது, தேர்தல் பணிகளில் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு பொதுத்தேர் தலை அமைதியாக நடத்திய ஊழியர்களுக்கு மதிப்பூதியம் இன்னும் வழங்கப்படவில்லை. தேர்தல் முடிந்தவுடன் சில நாட்களிலேயே இந்த மதிப்பூதியம் வழங்கப்பட்டு விடும். இதுவரை அப்படி தான் நடந்துள்ளது.
ஆனால் தேர்தல் முடிந்து 5 மாதங்களை கடந்தும் இன்னும் மதிப்பூதியம் வழங்கப்படாமல் இருக்கிறது. இது ஊழியர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. எனவே தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மதிப்பூதியம் தாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.