சென்னை,
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டசபையை அலங்கரித்து வந்துள்ளனர். 1967-ல் 6, 1971-ல் 8, 1977-ல் 1, 1980-ல் 8, 1984-ல் 4, 1989-ல் 5, 1991-ல் 1, 1996-ல் 1, 2001-ல் 3, 2006-ல் 1 என்ற எண்ணிக்கையில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்தனர்.
ஆனால், 2011, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில், சுயேச்சை வேட்பாளர் ஒருவர்கூட வெற்றிபெறவில்லை. அதே நேரத்தில், 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார்.
சட்டசபையில் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. இருந்த நிலையில், கடந்த தேர்தலில் (2021) சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இந்தத் தேர்தலிலும் சுயேச்சைகள் யாரும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.