சென்னை,
திமுகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சோர்ந்துவிட மாட்டார்கள் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
தவெக அரசில் காவல் துறையை சட்டம் ஒழுங்கு காப்பாற்றுவதற்கு பொதுமக்களை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தாமல், சிறையில் இருக்கக்கூடிய கைதிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பழனி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் இடத்தை இரண்டு கோடி ரூபாய்க்கு விட்டதில் முக்கிய குற்றவாளி சிறைச்சாலைக்கு உயிரோடு சென்றவர் ஒரு சில நாட்களில் சாகிறார், அதை குறித்து இதுவரை எந்த விசாரணையும் இல்லை. சிறைச்சாலையில் எப்படி செத்தார் மெயின் அக்யூஸ்ட்? நிர்மல் குமாருடைய பொறுப்பில் இருக்கக்கூடியதுதான் சிறைச்சாலை. சிறைச்சாலையில் ஒருவர் சாகிறார் என்றால் அது சந்தேகத்திற்குரியதாக இருக்கும். நான் பலமுறை அதுபற்றி கேட்டும் அது ஒரு விசாரணை கூட போடவில்லை. சாதாரணமாய் இப்படிப்பட்ட சாவுகள் நடந்தால் விசாரணை செய்து பொதுமக்களுக்கு வெளிப்படையாகக் காட்டும் சூழல் இருக்கும். ஆனால் இவ்வளவு அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டில் இன்றைக்கு காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி உள்ளனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார்கள். அவர் கைது செய்யப்பட்டது முறையாக கைது செய்யப்பட்டாரா, நியாயம்தானா? இதை அனைத்து வழக்கறிஞர்களும், பார் கவுன்சிலே தலையிட வேண்டும். ஒன்றரை மணிக்கு நீதிமன்றத்திலே அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. உடனடியாக அடுத்த கட்டம் சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் போவதற்கு மூத்த வழக்கறிஞருடைய அலுவலகத்திற்கு சென்று, அவரோடு பேசிக் கொண்டிருக்கிற நேரத்தில் காவல்துறை அத்துமீறி ஒரு வழக்கறிஞருடைய அலுவலகத்திலே சென்று அவரை கைது செய்திருப்பது மிக மிக கேவலமான ஒரு செயல். உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் இது போன்ற செயல்களில் காவல்துறை ஈடுபடக்கூடாது என்று பல தீர்ப்புகள் இருக்கின்றன. அதையெல்லாம் நீதிமன்றத்தில் நிச்சயமாக அதனுடைய கவனத்தில் கொண்டு வருவோம். இது மிகப்பெரிய ஒரு அயோக்கியத்தனம். காரணம் என்னவென்றால், வழக்கறிஞருடைய தொழில் என்பது யாராக இருந்தாலும், அதாவது ஜாமீன் விடுகிற போது கூட குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு நீதிமன்றத்திலே ஜாமீன் வழங்குகிற போது சொல்வார்கள், 'Accused is to arrange his defence' என்றுதான் சொல்வார்கள். அவரை பாதுகாத்துக் கொள்வதற்காக, அவர் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான காரணங்களால் தான் இவரை ஜாமீனில் விடுகிறோம் என்று கூட நீதிமன்றத்தில் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆக, அதுபோல ஒரு ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட உரிமைகள் இருக்கிற நேரத்தில், ஒரு வழக்கறிஞருடைய அதுவும் மூத்த வழக்கறிஞர், அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர் வில்சன் அவர்கள். அவருடைய அலுவலகத்திற்கு சென்று அத்துமீறி, அவர் ஒன்றரை மணிக்கு தீர்ப்பு வருது, 'நீங்கள் சுப்ரீம் கோர்ட்டில் போடுங்கள், சுப்ரீம் கோர்ட்டும் ரிஜெக்ட் பண்ணிருந்தா, அதுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்வதில் ஆட்சேபனை இல்லை'. ஆனால் அவர் வந்து அப்பீல் செய்வதற்குரிய நேரத்தை நேச்சுரல் ஜஸ்டிஸ் படி கொடுத்தாகணும். ஒரு கோர்ட்டில் நிராகரித்தா அடுத்த கோர்ட்டுக்கு போகிறவரை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நியதி. ஆனால், காவல்துறையினர் உடனடியாக போய் அவரை எந்த அளவுக்கு துன்புறுத்தி, இரவு இரண்டரை மணி, மூன்று மணிக்கு கொண்டு போய் ரிமாண்ட் பண்றார்கள்.
இதிலே கவனம் செலுத்துகிற விஜயனுடைய அரசு ஏன் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவதற்கு கவனம் செலுத்தவில்லை.? தவெகவினர் மீது பல குற்றச்சாட்டுகள். அதுமட்டுமல்ல, திருப்பதி கொடை ஊர்வலத்தில் ஒரு காவல்துறையைச் சார்ந்த வுமன் கான்ஸ்டபிளையே ஒரு தவெக காரர் பாலியல்துன்புறுத்தல் பண்ணிருக்கிறார். காவல்துறை கைது செய்து வழக்கு பதிவு செய்கிறது. ஆனால் மேலிடத்திலிருந்து தொலைபேசி கால் வந்தவுடனே, அந்த குற்றவாளி தவெகவை சார்ந்த காரணத்தினால் விடுவிக்கப்படுகிறார். சிங்கப்படையை சார்ந்த ஒரு பெண் போலீசையே ஒருத்தன் மாலஸ் பண்ணதை காவல்துறையில இருந்து பெயில்ல விட்டுறாங்க.
இதற்கெல்லாம் நேரம் செலுத்துகிற விஜய் இன்றைக்கு தமிழ்நாட்டிலே திமுகவைச் சார்ந்தவர்களுடைய வீடுகள் எல்லாம் சோதனை செய்கிறார்கள் என்றால், அதைப் பற்றி கவலை இல்லை, எங்களுக்கு வருத்தம் இல்லை. இதுபோல பல சோதனைகள் நாங்கள் பார்த்திருக்கிறோம். 2001-ல் என்ன ஆச்சு? கலைஞரை நள்ளிரவில் கைது செய்தார்கள். கொண்டு போய் சிறைச்சாலையில் வைத்தார்கள். எங்கள் தலைவர் தளபதியை கைது செய்து மதுரை சிறைக்கு அனுப்பினார்கள். இத்தனை வருஷம் ஆச்சு, ஒரு எஃப்.ஐ.ஆர் போட முடிந்ததா? கேஸ் போட முடிந்ததா? ஒரு நாள் செய்தி, ஒரு நாள் பரபரப்பு, அவ்வளவுதான். திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற பல வழக்குகளை சந்தித்து, அதெல்லாம் தவிடுபொடியாக்கி இருக்கு. இந்த ரைடு எல்லாம் ஒரு நாள் பத்திரிகை செய்தி வரும். அந்த செய்தியை வைத்துக்கொண்டு இந்த சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் எல்லாம் கவனத்தைத் திசை திருப்பலாம் என்று விஜய் முயற்சிக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம் களத்திலே இறங்கிவிட்டது. நீங்கள் கைது செய்தாலும் பரவாயில்லை, 31-ஆம் தேதி நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டம், தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான தாய்மார்கள் கலந்து கொண்டு, சட்ட ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு இப்படி பல்வேறு பிரச்சினைகளால் தாய்மார்கள் பெரும் பாதிப்பு. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றைக்கு குறைஞ்சபட்சம் 2000 ரூபாய்க்கு மேல செலவு செய்றார். அதாவது, நான் ஒரு சில இடத்தில விசாரிச்சு சொல்றாங்க, மு.க.ஸ்டாலினுடைய ஆட்சியில் மாசமான ஒரு 1000 ரூபாய் சேமிப்பு நாங்க பேங்க்ல போடுவோம், 1000 ரூபாய் உரிமை தொகை வரும். இந்த விடியல் பயணம் போறதுனால அதுல ஒரு 1000 ரூபாய் மிச்சம், 2000, 3000 மாசமான மிச்சம் பண்ணுவோம். தீபாவளி, பொங்கல் வரும்போது அதுக்கு நகை வாங்குவோம். ஆனால் இவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரு பைசா கூட சேமிக்க முடியவில்லை. நீங்கல்லாம் ஊடகக்காரர்கள், இதெல்லாம் போய் பாமர மக்கள் மத்தியில எடுத்து மக்களுக்கு போட்டு காட்டணும். காரணம், தளபதி ஆட்சியில் எவ்வளவு சேவிங் இருந்தது, இன்னைக்கு வந்து எவ்வளவு அந்த சேவிங் எல்லாம் எங்க போச்சு, விலைவாசி எவ்வளவு ஏறி இருக்கு, எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் தாய்மார்கள் என்பதை நீங்கள்தான் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது, இப்போ கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்கள் ரெய்டு இது எல்லாமே வந்து என்னன்னா, திருச்சி கிழக்கு இந்த இடைத்தேர்தலை மையமாக வச்சுதான் அரசு இப்படி ஒரு நடவடிக்கைக்கு போறாங்கன்னு பத்திரிக்கையில் செய்திகள் எல்லாம் எழுதி இருக்காங்க, அப்படியென்று பார்க்கிறீர்களா?
அன்பில் மகேஷ் வந்து பக்கத்து தொகுதிக்காரர், நேரு வந்து அந்த தொகுதி பொறுப்பேற்று நடத்த போறார். அவங்களுக்கு தகவல் போயிருக்கும் இல்லையா? ஆகையினால அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், திமுகவை பொறுத்தமட்டிலும் எங்கள் கட்சியில் கே.என்.நேரு போன்றவர்கள் எல்லாம் பல வழக்குகளை சந்தித்து வெற்றி பெற்று வந்தவர். ஆக, இதெல்லாம் அவருக்கு ஒன்றுமே கிடையாது. நீங்கள் அடிக்க அடிக்கத்தான் பந்து உந்துவாங்க, தீட்ட தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும். அடக்க அடக்கத்தான் திமுகக்காரன் துடிச்சி எழுந்துருவான். ஆக, நீங்கள் வழக்கு ஒவ்வொரு வழக்கு போட்டீங்கன்னா ஒரு படி மேலே எகிறி குதித்துதான் கட்சிக்காரன் வருவானே தவிர, யாரும் சோர்ந்து போய்விட மாட்டார்கள். அது நேருவாக இருந்தாலும் சரி, மகேஷாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும். திமுகவை பொறுத்தமட்டிலும் நீங்கள் எத்தனை வழக்கு போட்டாலும் அதை பொதுமக்கள் மத்தியிலே எடுத்து சொல்லி விளக்கி மக்களை எங்கள் பக்கம் திருப்புகிற ஆற்றலும் திறமையும் திமுக தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரை இருக்கிறது.
பொருளாதார நிபுணர் கலையரசன் வந்து அதிகாலை காவல்துறை அழைத்து செல்லப்பட்டு அப்புறம் விடுவிக்கப்பட்டிருக்காரு.? இதுபோல படித்தவர்களுக்கே இப்படி பண்றாங்க. ஆனால் தவெக ஐ.டி.விங்ல இருந்து வர வாசகங்கள் எல்லாம் பார்த்தா ஒவ்வொன்றும் அவ்வளவு கேவலமாகுது. ஆனால் அவர்களைப் பற்றி ஒரு நடவடிக்கை இல்லையே? பல புகார்களை கமிஷனரிடம் எடுத்துட்டு போய் நாங்க கொடுத்துட்டோம். ஏறத்தாழ எங்கள் வழக்கறிஞரணியின் சார்பிலே 40, 50 வழக்கு புகார் கொடுத்திருக்கோம். ஒரு புகார் மீது கூட இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கல. ஆனால் ஒரு படித்தவர், பேராசிரியர், ஆராய்ச்சியாளர், அவரை வந்து முகந்திரம் இல்லாம போயிட்டு கூட்டிட்டு போறாங்க, பாதில விடுறாங்க. இது என்ன கேலிக் கூத்தான அரசாங்கமா? இது போல கேலிக் கூத்துலாம் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.