தமிழக செய்திகள்

ஒழுங்கு நடவடிக்கை இருந்தாலும் ஓய்வுபெறும் நாளில் இனி பணியிடை நீக்கம் இல்லை: மின்வாரியம் உத்தரவு

ஒழுங்கு நடவடிக்கை இருந்தாலும் ஓய்வுபெறும் நாளில் இனி பணியிடை நீக்கம் இல்லை என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் லக்கானி வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது ஓய்வு பெறும் வயதை அடைந்து ஓய்வு பெற அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சேர வேண்டிய இறப்பு மற்றும் ஓய்வூதிய பணிக்கொடைத் தொகையை முழுமையாக பிடித்தம் செய்வதற்கு பதிலாக, அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட கணக்கிடப்பட்ட தொகையை மட்டும் பிடித்தம் செய்து விடுவிக்குமாறு கோரிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து விரிவாக ஆராயப்பட்டது. இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் முடிவடைந்த பின்னர் இறப்பு மற்றும் ஓய்வு கால பணிக் கொடைகள் வழங்கப்படும். யாருக்கு எதிராக குற்றவியல் புகார் விசாரணையில் உள்ளதோ அவர்கள் பணியிலிருந்து மட்டும் ஓய்வு பெறுவதற்கு ஏதுவாக,

அவர்களின் பணியிடைநீக்கம் அவர்கள் பணி ஓய்வு பெறும் தேதியில் ரத்து செய்யப்படுகிறது. மற்ற வழக்குகளில் மின்வாரியத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பு மற் றும் வசூலிக்கப்படாத நிலுவைத் தொகை ஏதேனும் இருந்தால் அவற்றை கழித்த பின்னர், மீதமுள்ள ஓய்வூதிய பணிக்கொடை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT