எல்.முருகன் 
தமிழக செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம் - எல்.முருகன்

2045 வரை மோடிதான் பிரதமர் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

வேலூர்,

வேலூரில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஆதவ் அர்ஜுனா சொல்வதை எங்காவது ஏற்றுக் கொள்ளமுடிகிறதா? மீனவர்களை ஏமாற்றக்கூடாது. பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், மின்சார பற்றாக்குறையை குறைக்கவும், இந்த அரசு செயல்பட வேண்டும். ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களாகியும், பழைய அரசையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது, இடைத்தேர்தல் எதற்காக, யாரால் வந்தது? ஒரு கட்சியில் வெற்றி பெற்று விட்டு, ராஜினாமா செய்து. ஆளும் கட்சியில் சேர்ந்து அவர்களே போட்டியிட்டால், மக்களை ஏமாற்றும் செயலாகத்தான் உள்ளது. சென்னையில் ஆளும் கட்சியை சேர்ந்தவரையே ஓட, ஓட வெட்டுகின்றனர். எதையெல்லாம் கட்டுப்படுத்துவோம் என சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ, அதில் எதையும் கவனிக்கவில்லை.

சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள வசதிகள், நவோதயா பள்ளிகளில் உள்ளன. தி.மு.க.,வினரில், எத்தனை பேர் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை நடத்துகின்றனர். நவோதயா பள்ளி வேண்டாம் என்றால், அதே அம்சம் கொண்ட அவர்களின் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை மூடுவார்களா? வேலுார் விமான நிலைய பணிகள் முடிந்து விட்டன. திறப்பு விழா தேதியை மட்டும் தான் நிர்ணயிக்க வேண்டி உள்ளது.

2045 வரை நரேந்திர மோடிதான் பிரதமராக இருப்பார். தொடர்ந்து பாஜகதான் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT