சென்னை,
காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுகுங்கள் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாட்டில் டெங்கு நிலவரம்: தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது: 56,863 (2023) → 46,971 (2024) → 25,585 (2025) → 17,049 (2026, இதுவரை).
ஒவ்வொரு காய்ச்சல் பாதிப்பும் கண்காணிக்கப்படுகிறது; காய்ச்சல் முகாம்கள், கொசு ஒழிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.
அச்சம் தேவையில்லை - ஆனால் அலட்சியமும் கூடாது. வீடுகளில் தேங்கிய நீரை அகற்றுங்கள்; காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுகுங்கள். இணைந்து செயல்படுவோம், தமிழ்நாட்டை பாதுகாப்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.