சென்னை,
பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக பதிவான வழக்கில் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர். மேலும் விசாரணைக்காக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது. மேலும் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ. விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ விவகாரத்தில் மாநில அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கையில் நம்பிக்கை உள்ளது. எனவே இந்த வழக்கி சிபிஐ விசாரணை தேவையில்லை. தவெக எம்எல்ஏ விவகாரத்தில் அரசு வேகமாக செயல்படுகிறது. புகார் கொடுத்து எத்தனை நாள் ஆகிறது என்பதே முக்கியம். இந்த பிரச்சனை ஆட்சியை கவிழ்க்க கூடிய அளவுக்கு அல்லது ஆட்சியை இழக்கக்கூடிய அளவுக்கு அழுத்தத்தை தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, நம்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.