சென்னை,
தவெக அரசின் வேளான் பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை என எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக பேசியதாவது;
தவெக ஆட்சி அமைந்து கடைசி 3 மாதங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். அவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களுடைய உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாகவும், இந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் தான் இன்று எங்களின் தலைவரின் உத்தரவின் பேரில் திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கருப்பு சட்டை அணிந்து எங்களின் எதிர்ப்பை தெரிவித்தோம்.
"தவெக அரசின் வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட, முதல்-அமைச்சருக்கு ஜால்ரா அடித்த புகழுரை என்று சொல்லலாம். தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் எதுவுமில்லை. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினர். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. மேகதாது, பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சகுபடி பிரச்சினை என பல பிரச்சினைகள் தமிழகத்தில் உள்ளன.
எந்த விதமான கோரிக்கைகளுக்கும், கேள்விகளுக்கும் முதல்-அமைச்சர் வாய் திறந்து பதில் தரவில்லை. காவிரி விவகாரம் குறித்துப் பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கியுள்ளோம். அப்போது நிறைய கேள்விகள் கேட்போம். முடிஞ்சா, தைரியம் இருந்தா முதல்-அமைச்சர் வாயை திறந்து பதில் சொல்லட்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.