தருமபுரி,
தருமபுரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-
கஞ்சா, போதைப்பொருளால் இளைஞர்கள், மாணவிகள் சீரழிந்து வருகின்றனர். நாம் பெற்ற பிள்ளைகள் நம் கண் முன்னே அழிந்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். போதைப்பொருட்களால், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகம் நடக்கின்றன.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் யார் அந்த சார் என்பதை கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம். தமிழ்நாட்டில் பாலியல் சீண்டல்களே நடக்கவில்லை என்கிறார் மு.க.ஸ்டாலின். பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்கள் நடந்த போது உடனே சிபிஐக்கு மாற்றியது அதிமுக அரசு. அண்ணா நகர் சிறுமி வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற திமுக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது.
பாஜகவிடம் நாங்கள் அடிமையாக இருக்கிறோமா?; எந்த கட்சியும் யாருக்கும் அடிமை இல்லை. மு.க.ஸ்டாலின் கட்சியைப் போல கூஜா தூக்கும் கட்சி அல்ல அதிமுக. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது வெள்ளைக் குடை பிடித்த வேந்தன் மு.க.ஸ்டாலின். பிரதமரின் தயவு தேவை என்பதால் அவருக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்தார் ஸ்டாலின்.
2021 தேர்தலின்போது நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என கூறினார்கள். எதையும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.