தமிழக செய்திகள்

என்னை குறித்த தில்லு முல்லு பிரசாரம் எடுபடாது - திமுக பொருளாளர் துரைமுருகன்

என்னை குறித்து பரப்பப்படும் தில்லு முல்லு பிரசாரம் எடுபடாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை

தனக்கு பொதுசெயலாளர் பதவி கிடைக்காததால் ஏக்கத்தில் இருப்பதாகவும், கட்சிக்குள் கலகத்தை உருவாக்க முனைவதாகவும் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தான் இதுவரை பெற்ற பதவிகள் தனக்கு கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து இரு வண்ண கொடியை பிடித்து கோஷமிட்டிருப்பேன்.

ஆசாபாசங்களுக்கு அப்பாற்றபட்டவன் நான். ஆளுங்கட்சிக்கு பல்லக்கு தூக்குவது, அமைச்சர்களுக்கு கவரி வீசும் நபர்களுக்கு ஒரு லட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை.

சுமார் 60 ஆண்டுகளாக தன்னை நன்கு அறிந்தவர்கள் திமுக இயக்கத் தோழர்கள் என்றும் தனக்கு எதிரான தில்லு முல்லு பிரச்சாரம் அவர்களிடம் எடுபடாது என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.