தமிழக செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கில் இன்று தீர்ப்பு இல்லை

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன.

சென்னை,

அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜி னாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து அ.தி.மு.க. கொறடா, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர். தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், தலைமை நீதிபதி விடுப்பு காரணமாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு வரும் 12-ம் தேதிக்கு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT