தமிழக செய்திகள்

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு: மாணிக்கம் தாகூர் வாழ்த்து

உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை உயர்த்திய வரலாற்றுத் தருணம் இது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 'தமிழ் வம்சாவளி' நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக நவநீதம் 'நவி' பிள்ளைக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர் வாழ்த்து

இந்த நிலையில், நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட நவநீதம் பிள்ளைக்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை உயர்த்திய வரலாற்றுத் தருணம்!

மனித உரிமைகளுக்காகவும் உலக நீதிக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் சமரசமின்றிப் போராடி வரும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சர்வதேச சட்ட மேதை நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கிறது.

நிறவெறி எதிர்ப்புப் போராட்டம் முதல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வரை அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பணிகள் நீதிக்கும் சமத்துவத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நவி பிள்ளைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT