தமிழக செய்திகள்

சுயநலத்திற்காக யாரும் இந்த இயக்கத்தை கூறுபோட விடமாட்டோம்: முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

சுயநலத்திற்காக யாரும் இந்த இயக்கத்தை கூறுபோட விடமாட்டோம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

வண்டலூர் அருகே நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அவர் கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*சுயநலத்திற்காக யாரும் இந்த இயக்கத்தை கூறுபோட விடமாட்டோம்.

*ஆட்சி கலைந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.

*எத்தகைய சவால்களையும் சந்திக்க தொண்டர்கள் ஓரணியில் இருக்க வேண்டும்.

சிலர் கொல்லைபுறமாக ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கின்றனர். அது ஒரு போதும் நடக்காது.

*எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆட்சியை யாரும் அசைக்க முடியாது.

*அதிமுக ஆட்சியும், கட்சியும் தமிழ் மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்.

*எங்களை எந்த சக்தியாலும் ஒடுக்கி விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT