தமிழக செய்திகள்

தூத்துக்குடி தொகுதியில் 22 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு; 6 மனுக்கள் தள்ளுபடி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை கடைசி நாளாகும்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, நேற்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபு தலைமையில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் கீதா ஜீவன், அ.தி.மு.க. வேட்பாளர் செல்லப்பாண்டியன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஸ்ரீநாத், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜேக்கப் தேவதாஸ் உள்பட மொத்தம் 25 நபர்களிடமிருந்து 33 வேட்புமனுக்கள் பெறப்பட்டிருந்தன.

நேற்று நடைபெற்ற தீவிர பரிசீலனைக்குப் பிறகு முறையான ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட 22 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. போதிய ஆவணங்கள் இல்லாதது மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் சுயேச்சைகள் மற்றும் மாற்று வேட்பாளர்களின் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தற்போதைய நிலவரப்படி, தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.