கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

விருப்ப மாறுதல் கோர தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் இயக்குனரகங்கள், அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடப்பாண்டு எமிஸ் இணையதளம் மூலமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

பொதுமாறுதல்

ஆண்டுதோறும் ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை மட்டுமே பொதுமாறுதல் வழங்கப்படும். நிர்வாக நலன், பதவி உயர்வு, நீண்டகால விடுப்புக்குப்பின் பணியில் சேருதல், தற்காலிக பணிநீக்க ரத்து ஆகிய காரணங்களுக்காக மட்டுமே மற்ற காலங்களில் மாறுதல் வழங்க வேண்டும்.

கட்டாய மாறுதலில் இருந்து விலக்கு

இதுதவிர ஜூன் 30-ந்தேதியுடன் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை கட்டாயம் மாறுதல் செய்யவேண்டும். குரூப் 'டி' பணியாளர்கள், டிரைவர்கள், ஆய்வக உதவியாளர்கள், 100 சதவீத பார்வையற்றவர்கள் மற்றும் ஓய்வுபெற ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான காலம் உள்ளவர்களுக்கு கட்டாய மாறுதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எமிஸ் இணையதளம் மூலமாகவே...

விருப்ப மாறுதல் கோர தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும். கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல், பணிமூப்பு பட்டியல், காலிப்பணியிட விவரங்கள் அனைத்தும் எமிஸ் இணையதளம் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

SCROLL FOR NEXT