தமிழக செய்திகள்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னையில் சாலை பள்ளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை தார்க்கலவை மற்றும் சிமெண்ட் கலவைக் கொண்டு சீர் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

சென்னை,

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இன்று (17.11.2026) மாதவரம் மண்டலம், வார்டு-25க்குட்பட்ட மேதா நகர் சாலை, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-35க்குட்பட்ட கே.கே.டி நகர், 3ஆவது பிரதான சாலை, முத்தமிழ் நகர் மேற்கு அவென்யூ சாலை, அம்பத்தூர் மண்டலம், வார்டு-84க்குட்பட்ட சிட்கோ 7ஆவது தெரு, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-129க்குட்பட்ட என்.எஸ்.கே லேன், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-147க்குட்பட்ட கிருஷ்ணா நகர் 27ஆவது தெரு, பெருங்குடி மண்டலம், வார்டு-182க்குட்பட்ட நேரு நகர், 1ஆவது குறுக்கு தெரு, திரு.வி.க 1ஆவது குறுக்கு தெரு, ஹரிவர்தன் தெரு, வார்டு-183க்குட்பட்ட வி.ஜி.பி 1ஆவது பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை தார்க்கலவை மற்றும் சிமெண்ட் கலவைக் கொண்டு சீர் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT