தமிழக செய்திகள்

வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசு

தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சென்னை,

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!

வாணவேடிக்கை வாக்குறுதிகளை

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளி தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ளது.

இந்த அரசு, தனது நிர்வாக திறமையின்மையாலும், “ ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ப்ளாப்” ஆக்கியிருக்கிறது.

இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராட தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோப கனலில் இருந்து தப்பித்து கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல! எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாக கூறுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.