தமிழக செய்திகள்

வள்ளலார் சபை நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் - ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பக்கூடிய நடைமுறை துவங்கி இருப்பதாக அறநிலையத்ததுறை தெரிவித்துள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வநிலையத்தின் சத்யஞான சபையின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

அப்போது சத்யஞான சபையைச் சுற்றி சுற்றுச்சுவர், சாலைகள் ஆகியவற்றை அமைக்க அரசின் ஒப்புதல் பெற்று டெண்டர் நடவடிக்கைகள் மூன்று மாதங்களல் துவங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வள்ளலார் சத்யஞான சபை நிலத்தில் இருக்கக்கூடிய சுமார் 269 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் நடைமுறை தொடங்கி இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT