தமிழக செய்திகள்

மின்துறை தொடர்பான சேவைகளுக்கு புகார் எண் அறிவிப்பு..!

மின் துறை புகார் சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மின் துறை சேவை தொடர்பான புகார்களுக்கு மின்வாரியம் புதிய எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

புகார் எண்

``மின்துறை சேவைகள் தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் “TNEB WhatsApp Chatbot” வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சார புகார்களை பதிவு செய்ய 94987 94987 என்ற வாட்ஸ் அப் எண்ணில் “HI” என பதிவிட வேண்டும். அலைபேசி எண் அல்லது மின் இணைப்பு எண் மூலம் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT