தமிழக செய்திகள்

இனி செல்ல பிராணிகளுக்கும் ஆன் லைனில் உணவு டெலிவிரி

கிளவுட் கிச்சன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உணவை நேரடியாக வீட்டிற்கே வரவழைத்துக் கொள்ளலாம்.

சென்னை,

சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற தாஜ் கன்னிமரா ஹோட்டலில் வைத்து வாக் என் டைன் செல்லப்பிராணிகளுக்கான தனது புதிய கிளவுட் கிச்சனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுவாக செல்லப்பிராணிகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகளையே அதிகம் வழங்கி வருகிறோம். புதிய மற்றும் இயற்கை பொருட்களால் சமைக்கப்பட்ட உணவுகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

பிரபல சமையல் கலைஞர் தாமு இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டு, செல்லப்பிராணிகளுக்கான தேவையான உணவின் அவசியத்தை குறித்து அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் சத்தான மற்றும் புதிய கோழி இறைச்சி, சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் மற்றும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

தங்களது செல்லப்பிராணிகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவுகளை வழங்க வேண்டும் என்ற ஆர்வம் உரிமையாளர்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது.

மேலும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உணவை நேரடியாக வீட்டிற்கே வரவழைத்து ஆன் லைனில் டெலிவிரி செய்து கொள்ளலாம்.

இதற்கு முன்னதாகவே 2019-ஆம் ஆண்டில் சரண்யா கந்ததாய் என்பவரால் ஸ்லர்பப் என்ற சிறிய அளவிலான கிளவுட் கிச்சன் சென்னையில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.