தமிழக செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

ஓ.பன்னிர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.

திருச்செந்தூர்,

முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்தார். அங்கு அவர் சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை தட்சணாமூர்த்தி சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

ஓ.பன்னீர் செல்வம் திருச்செந்தூர் வருகையை அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், 2-வது நாளாக இன்று காலை திருச்செந்தூர் கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

SCROLL FOR NEXT