தமிழக செய்திகள்

கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் விவகாரம் - சென்னை ஐகோர்ட்டு வேதனை

உயர் பொறுப்பில் இருப்பவர் பாலியல் புகார் அளிப்பது நம் குடியரசுக்கு துயரமான நாள் என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

சென்னை,

கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம், நம் குடியரசுக்கு ஒரு துயரமான நிகழ்வு என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

கலெக்டருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன் பிறப்பித்த உத்தரவில், "மாவட்ட கலெக்டர் நிலையிலேயே, இத்தகைய சூழல் நிலவுகிறது என் றால், குறைந்த அதிகாரப்பொறுப்பில் உள்ள ஒருவர், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் புகார் அளிக்க நேரிட்டால், நிலைமை என்னவாகும்? என்று நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.

அரசு பணியில் மிக வலிமையான பதவிகளில் ஒன்று மாவட்ட கலெக்டர் பதவி. இத்தகைய உயரிய பொறுப்பில் இருப்பவர், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் புகார் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது, நம் குடியர சுக்கு ஒரு துயரமான நிகழ்வாகும். துன்புறுத்தல் என்பது காலம், இடம், பொருளாதார நிலை, அந்தஸ்து அல்லது ஒரு பெண் வகிக்கும் பதவி என, எதையும் கருத்தில் கொள்வதில்லை என்பதை, இது காட்டுகிறது. தேவையற்ற விளம்பரத்தை தவிர்க்கவே கலெக்டர் புகார் அளிக்காமல் இருந்துள்ளார் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT