தமிழக செய்திகள்

ஆபாச குறுஞ்செய்தி: த.வெ.க. எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும் -பாலகிருஷ்ணன்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு வரலாற்று சிறப்புமிக்க முறையில் செயல்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் த.வெ.க. எம்.எல்.ஏ.வை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வரவேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நாகப்பட்டினத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில், தமிழக அரசு வரலாற்று சிறப்புமிக்க முறையில் செயல்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பாராட்டு

அதன்படி காலங்காலமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் மட்டும் தீபத்தை ஏற்றி, மதவெறி சக்திகளுக்கு இடமில்லாத மாநிலம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழக அரசு நட வடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை எடுத்த தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் விஜய்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உடனே கைது செய்ய வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் த.வெ.க. எம்.எல்.ஏ.வை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT