தூக்கில் தொங்கிய நிலையில்
காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிகரை பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) காஞ்சீபுரம் மண்டலம் செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னை திருவேற்காட்டை சேர்ந்த மணி (வயது 59) பிடித்தம் மற்றும் தீர்வு மற்றும் தொழிலாளர் நலன் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை தனது அலுவலகத்தில் 8.20 மணிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் காலை 10 மணியளவில் அலுவலகத்தின் கீழ் தளத்தில் உள்ள அறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. சக பணியாளர்கள் அறையில் எட்டி பார்த்தபோது மணி மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியவாறு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பணிச்சுமை காரணமா?
இதுகுறித்து அவர்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் மணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணி நிறைவு பெற இன்னும் ஒரு வருட காலமே உள்ள நிலையில் மணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.