தமிழக செய்திகள்

மின் பகிர்மான வட்டங்களில் அதிகாரிகள் சோதனை: மின் விதிமீறல்கள் கண்டுபிடிப்பு - 98.40 லட்சம் வசூல்

மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையை செலுத்தியதால் காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

சென்னை,

மின் பகிர்மான வட்டங்களில் நடத்தப்பட்ட கோட்ட அளவிலான அதிரடி சோதனையின் போது 76 மின் திருட்டுகள் மற்றும் 24 மின் வீதிமீறல்கள் கண்டறியப்பட்டது. இழப்பீட்டு தொகையாக 98.40 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

அதிரடி சோதனை

15.06.2026 முதல் 30.06.2026 வரை தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய அமலாக்க கோட்ட பிரிவுக்குட்பட்ட சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை மையம், சென்னை தெற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் வடக்கு, திருப்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர் மற்றும் விழுப்புரம் அமலாக்க உப கோட்டப் பிரிவுகளால் பல்வேறு நாட்களில் சென்னை வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, மதுரை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், மற்றும் திண்டுக்கல் ஆகிய அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் நடத்தப்பட்ட கோட்ட அளவிலான அதிரடி சோதனையின் போது 76 மின் திருட்டுகள் மற்றும் 24 மின் வீதிமீறல்கள் கண்டறியப்பட்டு இழப்பீட்டு தொகையாக சென்னை கோட்ட அமலாக்க பிரிவின் மூலமாக ரூ.12,44,812/- (ரூபாய் பன்னிரண்டு லட்சத்து நாற்பத்தி நான்கு ஆயிரத்து எண்ணூற்று பன்னிரண்டு மட்டும்), ரூ.36,06,867/- (ரூபாய் முப்பத்தாறு லட்சத்து ஆறாயிரத்து எண்ணூற்று அறுபத்து ஏழு மட்டும்) மற்றும் மதுரை, திருச்சி அமலாக்க பிரிவின் மூலமாக ரூ.29,28,826/- (ரூபாய் இருபத்தொன்பது லட்சத்து இருபத்தெட்டாயிரத்து எண்ணூற்று இருபத்தாறு மட்டும்) என ஆக மொத்தம் ரூ.98,39,594/- (ரூபாய் தொண்ணூற்று எட்டு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து ஐந்நூற்று தொண்ணூற்று நான்கு மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.4,77,500/- (ரூபாய் நான்கு லட்சத்து எழுபத்து ஏழு ஆயிரத்து ஐந்நூறு மட்டும்) செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

தகவல் தெரிவிக்க

மின் திருட்டு தொடர்பான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ சென்னை கைபேசி 9445857591, கோவை அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443049456, மதுரை அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443037508, திருச்சி அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443329851 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.