தமிழக செய்திகள்

பழைய ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களில் நேரில் சென்று மாற்றிக்கொள்ளலாம்.

சென்னை,

பொதுமக்களிடம் உள்ள பழைய ரூ.2,000 நோட்டுகளை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பழைய ரூ.2,000 நோட்டுகள்

கடந்த 2023-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில், கடந்த ஏப்ரல் 30-ந்தேதி நிலவரப்படி 98.47 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இருப்பினும், ரூ.5,451 கோடி மதிப்பிலான நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படாமல் உள்ளன.

பழைய ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள், ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களில் நேரில் சென்று மாற்றிக்கொள்ளலாம். நேரில் செல்ல முடியாதவர்கள், தபால் மூலமாகவும் நோட்டுகளை அனுப்பி வைக்கலாம். உரிய நடைமுறைகளைப் பின்பற்றிய பிறகு, அதற்கான தொகை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

தமிழகத்தில் பழைய ரூ.2,000 நோட்டுகளை மாற்ற விரும்புவோர், சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது தபால் மூலமாக நோட்டுகளை அனுப்பலாம் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT