வல்லம்,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 ஆண்கள், 3 பெண்கள் உள்பட 9 பேர் உறவினரை வெளிநாட்டுக்கு அனுப்ப திருச்சி விமான நிலையம் நோக்கி ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சையை அடுத்த புதுக்குடி காமாட்சிபுரம் அருகே சென்றபோது வேனில் புகை வந்துள்ளது. இதனை கவனித்த வேன் டிரைவர் உடனடியாக வேனை நிறுத்தி அனைவரையும் வெளியேற்றினார்.
அப்போது சிறிது நேரத்திலேயே வேன் முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவலறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் ஆம்னி வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
மேலும் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.