தமிழக செய்திகள்

ஏப்.23-ல் தமிழகத்தில் விடியா திமுக ஆட்சியை துடைத்தெறிவோம்..! - வானதி சீனிவாசன்

முதியோர், பெண்கள், மாணவிகளிடம் போதையில் வீரத்தைக் காட்டும் அளவிற்கு தமிழக இளைஞர்களை மாற்றி இருப்பது இந்த தீய ஆட்சியின் சாபக்கேடு என்று வானதி சீனிவாசன் கூறினார்.

திருத்தணி,

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருத்தணி அருகே கஞ்சா போதைக் கும்பல் இளைஞர்கள் கண்ணில் கண்ட பெண்களை விரட்டித்தாக்கி அவர்களிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் காணொளி சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த மதிகெட்ட இளைஞர்கள் கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் அத்துமீறி இருப்பது விடியா திமுக ஆட்சி போதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்து தமிழக இளைஞர்களை எந்த அளவிற்கு சீரழித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

தமிழகத்தின் அப்பா என்று கூறிக் கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; முதியோர், பெண்கள், மாணவிகளிடம் போதையில் வீரத்தைக் காட்டும் அளவிற்கு தமிழக இளைஞர்களை மாற்றி இருப்பது இந்த தீய ஆட்சியின் சாபக்கேடு..!

இளைஞர் சக்தியை மீட்க, போதைக் கலாச்சாரத்திலிருந்து தமிழக இளைஞர்களை மாற்ற பொன்னான நாளான ஏப்ரல் 23-ல் தமிழகத்தில் விடியா திமுக ஆட்சியை துடைத்தெறிவோம்..!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.