தமிழக செய்திகள்

ஓணம் எதிரொலி.. விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு!

சென்னையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னை,

கேரளாவின் மிக முக்கிய விழாவான ஓணம் பண்டிகை10 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு (2026) ஓணத்தின் முக்கிய நாளான திருவோணம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. இதனை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் கேரள மக்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை - கொச்சி வழக்கமான விமான கட்டணம் ரூ.5,336 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.14,843 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, சென்னை- திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.5,853 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.14,700 ஆக உயர்ந்துள்ளது.