தமிழக செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக பெங்களூரு-கண்ணூர் சிறப்பு ரெயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சேலம்,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக பெங்களூரு கன்டோன்மென்ட்-கண்ணூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, பெங்களூரு கன்டோன்மென்ட்- கண்ணூர் சிறப்பு ரெயில் (06567) வருகிற 20-ந் தேதி இரவு 10.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம் வழியாக மறுநாள் அதிகாலை 2.10 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடையும்.

சேலத்தில் இருந்து அதி காலை 2.20 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வழியாக சென்று, மதியம் 12.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும். இதேபோல், கண்ணூர்-பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06568) வருகிற 21-ந் தேதி மாலை 4.10 மணிக்கு கண்ணூ ரில் இருந்து புறப்பட்டு இரவு 12.15 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடையும்.

பின்னர் சேலத்தில் இருந்து 12.25 மணிக்கு புறப் பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.