சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரத்திற்கு 3 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
* கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து இன்று (21-ந்தேதி) இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06573), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (22-ந்தேதி) மாலை 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06574), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும்.
* பெங்களூருவில் இருந்து நாளை (22-ந்தேதி) மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06575), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் (23-ந்தேதி) மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06576), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
* பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து வருகிற 28-ந்தேதி மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06579), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06580), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது