திருப்பூர்,
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு 20-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பெங்களூரு கண்டோன் மென்ட்டில் இருந்து 20-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மதியம் 12.50 மணிக்கு கண்ணூர் சென்றடைகிறது.
இந்த ரெயில் 21-ந் தேதி அதிகாலை 2.10 மணிக்கு சேலத்துக்கும், 3.15 மணிக்கு ஈரோட்டுக்கும், 4.03 மணிக்கு திருப்பூருக்கும், 5.48 மணிக்கு போத்தனூருக்கும் சென்று சேரும். இதுபோல் கண்ணூரில் இருந்து 21-ந் தேதி மாலை 4.10 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு கண்டோன் மென்ட் பகுதிக்கு சென்று சேரும். இந்த ரெயில் 21-ந் தேதி இரவு 9.40 மணிக்கு போத்தனூருக்கும். 10.28 மணிக்கு திருப்பூருக்கும், 11.15 மணிக்கு ஈரோட்டுக்கும், நள்ளிரவு 12.05 மணிக்கு சேலத்துக்கும் சென்று சேரும்.
இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.