சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 2.15 மணிக்கு மேற்குவங்க மாநிலம் சந்திகாச்சிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06058) இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.