திருப்பூர்,
ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, பெங்களூரு-திருவனந்தபுரம் வடக்கு (வண்டி எண்.06579) சிறப்பு ரெயில் வருகிற 28-ந்தேதி மாலை 4.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கிற்கு சென்றடையும்.
இந்த ரெயில் திருப்பூருக்கு வருகிற 29-ந்தேதி நள்ளிரவு 12.20 மணிக்கு வந்து 12.22 மணிக்கு புறப்படும். திருவனந்தபுரம் வடக்கு-பெங்களூரு (06580) சிறப்பு ரெயில் வருகிற 29-ந்தேதி மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு வருகிற 29-ந்தேதி இரவு 9.38 மணிக்கு வந்து 9.40 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை, ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.