சென்னை,
ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி அவருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தாய் மண்ணின் மானத்திற்காகவும், அடக்குமுறைக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டிற்காகவும் வரலாற்றில் தடம் பதித்த மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாள் இன்று. காலங்கள் மாறினாலும், தலைமுறைகள் கடந்தாலும், அவரது பெயருடன் இணைந்த துணிச்சலும் தியாகமும் தமிழர் வரலாற்றின் நினைவுப் பக்கங்களில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தாய் மண்ணின் மீதான பற்றின் அடையாளமாக வாழ்ந்த மாவீரர் ஒண்டிவீரனின் இந்த நாளில் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.