தமிழக செய்திகள்

ஒண்டிவீரன் நினைவு தினம் - வானதி சீனிவாசன் புகழஞ்சலி

ஒண்டிவீரனின் வீரத்தையும் நாட்டுப் பற்றையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்.

சென்னை,

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு தினத்தையொட்டி தேசிய பாஜக முன்னாள் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

புகழஞ்சலி

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

பூலித்தேவன் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும், தனியாகச் சென்று ஆங்கிலேயப் படைக்கு எதிராகப் பல போர்களில் வெற்றி கண்ட மாவீரரான ஒண்டிவீரன் அவர்களது நினைவு நாளில் அவரது வீரத்தையும் நாட்டுப் பற்றையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.