ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஓ பன்னீர்செல்வம் சென்ற இடம் ஆமை புகுந்த வீடு போன்றதாக மாறிவிடும். ஓ பன்னீர் செல்வம் விலகலால் அதிமுக தூய்மையாகிவிட்டது. ஓ பன்னீர் செல்வம் திமுகவின் பி டீம் என்பது தற்போது நிருபணம் ஆகிவிட்டது. அதிமுகவில் இருந்த களைகள் தற்போது அகற்றப்பட்டுவிட்டன. களைகள் அகற்றப்பட்டுவிட்டதால் அதிமுக இனி செழித்து வளரும். அதிமுவை யாராலும் விழுங்க முடியாது. அதிமுகவில் இருந்து சென்ற செல்லாக்காசுகளை திமுகவில் சேர்த்து வருகிறார்கள்
தமிழகத்தில் உள்ள 8 கோடி பேரை சுரண்டி ஒரு குடும்பம் பிழைத்து கொண்டு இருக்கின்றது. வரும் தேர்தலில் இந்த குடும்பத்தை வீழ்த்த வேண்டும். திமுக ஆட்சி இருக்கும் வரை நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்காது. துன்பம்தான் மிச்சம்.திமுகவில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. திமுக ஆட்சி எப்போது வந்ததோ அப்போதில் இருந்து சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு நடக்காத நாளே தமிழ்நாட்டில் இல்லை. இப்படிப்பட்ட ஆட்சி தொடரக்கூடாது. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.” இவ்வாறு அவர் கூறினார்.