தமிழக செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாற்​று திறனாளி மாணவர்களுக்கு கூடு​தலாக ஒரு மணி நேரம் சலுகை: தேர்​வு துறை இயக்​குநர் அறிவிப்பு

அந்த மாணவர்​கள் கூடுதல் ஒரு மணி நேரம் சலுகையை பயன்படுத்த விரும்​ப​வில்லை எனில் அதற்கு அனு​ம​திக்க வேண்​டும்.

சென்னை

அனைத்து மாவட்ட முதன்​மை கல்வி அலு​வலர்​களுக்கு தேர்​வு துறை இயக்​குநர் க.சசிகலா அனுப்​பிய சுற்​றறிக்கையில்: பொதுத்தேர்வு எழுதும் மாற்​று திற​னாளி மாணவர்களுக்கு வழக்​கத்​தை​ விட கூடு​தலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்​கப்​பட்​டுள்ளது.

அதே​நேரம் அந்த மாணவர்​கள் கூடு​தல் ஒரு மணி நேரம் சலுகையை பயன்​படுத்த விரும்​ப​வில்லை எனில் அதற்கு அனுமதிக்க வேண்​டும்.

அதாவது, வழக்​க​மான தேர்வு நேர​மான 3 மணி நேரம் (காலை 10.15 முதல் மதி​யம் 1.15 மணி வரை) முடிந்த பின்​னர் மாற்​று திறனாளி​கள் தங்​கள் விருப்​பத்​தின்​படி தேர்வு அறையை விட்​டு செல்லலாம். அதற்​கான படிவத்​தில் பூர்த்​தி​ செய்து கையொப்பமிட வேண்​டும்.

அந்த படிவங்​களை தொகுத்து அனைத்து தேர்​வு​களும் முடிந்​ததும், சம்​பந்​தப்​பட்ட மாவட்ட தேர்​வு துறை உதவி இயக்​குநர் அலுவலகத்​தில் ஒப்​படைக்க முதன்​மை கண்​காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்​டும்.