சென்னை தலைமை செயலகத்தில் மது விலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஆன்லைனில் மதுபானம் விற்பனை என்பது தவறானது. ஆன்லைனில் மதுவை பெற முடியாது: முன்பதிவு மட்டுமே செய்ய முடியும். கடைகளில் போய்தான் மதுபானம் வாங்க முடியும். ஆன்லைன் முன்பதிவு சோதனை நிலையில்தான் உள்ளது.எல்லா நிறுவனத்தின் மது பானங்களும் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 பெறுவதை தடுக்கவே புதிய திட்டம் கொண்டுவரப்படுகிறது. மதுபானம் மூலம் அரசுக்கு வருவாய் பெருக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. மதுபானம் விலை உயராது. ஊழலை தடுத்ததால் வருமானம் அதிகரித்துள்ளது. மதுக்கூடங்களின் அவல நிலை மாற்றப்படும். இடையூறான மதுக்கடைகள் இடமாற்றப்படும். பாட்டிலுக்கு 10 ரூபாய் என்பது 2011 முதலே உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.