தமிழக செய்திகள்

வருகின்ற 13-ம் தேதி வரை ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக பாதுகாப்பு கருதி இன்று முதல் வருகின்ற 13-ம் தேதி வரை ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT