தமிழக செய்திகள்

கடற்கரையில் குழாய் பதிக்க எதிர்ப்பு; தூத்துக்குடியில் மிதவை கப்பலை மீனவர்கள் முற்றுகை

தூத்துக்குடி கடற்கரையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, நடுக்கடலில் மிதவை கப்பலை நாட்டுப்படகு மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடற்கரை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட நாட் டுப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப் பகுதியில் 3 தலைமுறைகளாக மீன்பிடித் தொழில் நடக்கிறது.இந்த நிலையில் வ.உ.சி. துறைமுகம் சார்பில், தனியார் நிறுவனம் மூலம் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்காக கடற்கரை பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மிதவை கப்பலை மீனவர்கள் முற்றுகை

இதனால் கடல் அரிப்பு ஏற்படுவதுடன் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்க ளான பவளப்பாறைகள் சேதமடையக்கூடும், பாரம்பரிய மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என்று கூறி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் நாட்டுப்படகு மீனவர் சங்க மாநில பொதுச்செயலாளர் ரீகன், மாநில துணைத்தலைவர் ஜோசப், மாவட்ட தலைவர் ராஜ் உள்ளிட்ட மீனவர்கள் நேற்று காலையில் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரம் கடலுக்குள் நாட்டுப் படகுகளில் சென்றனர். அங்கு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மிதவைக் கப்பலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து மீனவர்களிடம் துறைமுக செயற்பொறியாளர் ஷீபா, தனியார் நிறுவன மேலாளர் பாலமுருகன், துறைமுக மேலாளர் கிஷோர் மற்றும் அதிகாரிகள் பேச் சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட் டம் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு நாட்டுப்படகுகளுடன் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT