தமிழக செய்திகள்

தமிழகத்தில் உள்ள 2,640 டாஸ்மாக் பார்கள் மூட உத்தரவு

தமிழ்நாட்டில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை இன்று மாலை 5 மணியுடன் மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் ஜூன் 30-ஆம் தேதியுடன் உரிமம் முடிவடைந்ததால், அனைத்து பார்களையும் உடனடியாக மூட தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

டாஸ்மாக் பார்கள் மூட உத்தரவு

கடந்த 2024 ஜனவரி மாதம் இரண்டு ஆண்டு காலத்திற்கு பார்களுக்கான உரிமம் வழங்கப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த உரிமம் ஜூன் 30 வரை தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அவகாசம் முடிந்ததால், மேலும் நீட்டிப்பு வழங்கப்படாமல் அனைத்து 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு.

நடவடிக்கை

மூடப்பட்ட பார்கள் அனைத்தும் உடனடியாக திறக்கப்படாது. அரசு புதிய டெண்டர்களை அறிவித்து, அவை இறுதி செய்யப்பட்ட பின்னரே தகுதியான பார்கள் மீண்டும் திறக்கப்படும். மேலும் பார்கள் மூடப்படுவதால், பொதுமக்கள் சாலைகள், பூங்காக்கள் அல்லது இதர பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க காவல்துறை கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மீறி பொது இடங்களில் மது அருந்துவோர் மீது காவல்துறை மூலம் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.

அதையும் மீறி பொது இடங்களில் மது அருந்துவோர் மீது காவல்துறை மூலம் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.