சென்னை,
அன்பில் மகேசுக்கு போலீஸ் காவல் வழங்குவது குறித்து நவ.2ம் தேதி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ரூ.400 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதேபோன்று, தனது இல்லத்தில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மனுக்களுக்கு பதிலளிக்க போலீசார் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி சத்தியமூர்த்தி உத்தரவிட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இதே சிறப்பு கோர்ட்டு, இதுதொடர்பாக அன்பில் மகேஷ் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அன்பில் மகேசுக்கு போலீஸ் காவல் வழங்குவது குறித்து நவ.2ம் தேதி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 நாட்கள் போலீஸ் காவல் என தகவல் வெளியான நிலையில் நவம்பர் 2-ஆம் தேதி நீதிபதி உத்தரவு பிறப்பிக்கிறார்.