தமிழக செய்திகள்

இயற்கை விவசாயிகள் நம்மாழ்வார் விருது பெற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

அரியலூர்,

இயற்கை விவசாயிகள் நம்மாழ்வார் விருது பெற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நம்மாழ்வார் விருது

இது குறித்து அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் https://www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவுக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும்.

ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசு

குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும் அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும். முழுநேர உயிர்ம விவசாயியாக இருக்க வேண்டும். வெற்றிபெறும் 5 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருதுடன் தலா ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும். எனவே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த விருது பெற விண்ணப்பிக்கும் முறைகள், அதற்கான வழிமுறைகள் குறித்து அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT