சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். அப்போது, நினைவுப் பரிசையும் அவர் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு அவர் வழங்கினார்.
ஏற்கனவே, சட்டசபை தேர்தலுக்கு பிறகு, த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் (உயர்கல்வித்துறை), ராஜேஷ்குமார் (சுற்றுலாத்துறை) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில்தான், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சந்தித்து பேசியிருக்கிறார். இதேபோல், தென்னிந்திய பிராந்தியங்களுக்கான ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரியும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று சந்தித்து பேசினார்.