சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
பெட்ரோல்- டீசல் விலையை இரண்டு வாரங்களில் நான்கு முறை உயர்த்தி உள்ளது ஒன்றிய பாஜக அரசு. இன்று பெட்ரோல் ரூ 107.77 டீசல் ரூ 99.55.
இதில் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல மத்திய - மாநில அரசுகள் வரிமூலம் வருவாயாக பெறுவது மட்டும் 50 சதவீதம்.
உங்களால் சர்வதேச சந்தையில் விலையை குறைக்க முடியாது. அமெரிக்கா- ஈரான் சண்டையை நிறுத்த முடியாது. விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?
அரசுக்கு வரும் வரி வருவாயில் இருந்து மக்களுக்கு விலையை குறைத்து நிவாரண வழங்க மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.