தமிழக செய்திகள்

மதுவில் விஷம் கலந்து குடித்து பெயிண்டர் தற்கொலை

மதுவில் விஷம் கலந்து குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி

மதுவில் விஷம் கலந்து குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் உமாபதி (வயது 27). பெயிண்டர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் அவருக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுவில் விஷத்தை கலந்து குடித்து ஆரணி பையூர் சாலையில் வாயில் நுரைதள்ளிய நிலையில் உமாபதி விழுந்து கிடந்தார். அது குறித்து அறிந்த மனைவி மேனகாவு அக்கம் பக்கத்தினருடன் அங்கு சென்று உமாபதியை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

டாக்டர்கள் பரிசோதித்ததில் உமாபதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆரணி தாலுகா போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து உமாபதி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த உமாபதிக்கு சாகானா (6) ரித்திக் (3) ஆதித்தியா, அனன்யா (2) என்ற 4 குழந்தைகள் உள்ளனர்.

SCROLL FOR NEXT