தமிழக செய்திகள்

டாரஸ் லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் சாவு

நல்லம்பள்ளி அருகே டாரஸ் லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் இறந்தார்.

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே கக்கன்ஜிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52), பெயிண்டர். இவர் நேற்று காலை தடங்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சேலம்-கிருஷ்ணகிரி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று முருகேசன் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT