தமிழக செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு

கடலூல் மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிழந்தா.

கடலூர் புதுப்பாளையம் மணலி எஸ்டேட்டை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பாலமுருகன் (வயது 37), பெயிண்டர். இவரது மனைவி விழல்மதி (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று இவர், கடலூர் மாருதி நகரில் உள்ள ஒரு வீட்டின் 2-வது மாடியில் பெயிண்டிங் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பின் தலையில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விழல்மதி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போதிய பாதுகாப்பு செய்து தராத பெயிண்டிங் ஒப்பந்ததாரர் சீனுவாசன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.